
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகர், நடிகைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த ரோஜர் மூரி, இயக்குனர் ஜோனாதன் டிமி உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.