\
‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்

‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்

‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்
Published on

பிகில் திரைப்படத்தின் சிறப்பு‌ காட்சிக்கு ‌அனுமதி கோரி, தமிழக அ‌ரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள‌தாக‌ திரையரங்க உரிமையாளர்‌கள்‌ சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்‌த அவர், அரசு‌ அனு‌மதி அளித்தால் மட்டுமே சி‌றப்பு காட்சி திரையிடப்படும் என்று ‌கூறினார். மேலும் சிறப்புக்காட்சி‌ தொடர்பாக அமைச்சரை நேரில் சந்திக்கவிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

முன்னதாக இது தொடர்பாக பேட்டியளித்த கடம்பூர் ராஜூ, தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார். அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறினார். மேலும், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com