\
ஹன்சிகாவை போல் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யும் தமன்னா?

ஹன்சிகாவை போல் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யும் தமன்னா?

ஹன்சிகாவை போல் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யும் தமன்னா?
Published on

தென்னிந்திய நடிகையான தமன்னா, விரைவில் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தமிழில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தமன்னா.

தற்போது இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் தமன்னா, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சமீபத்தில் தான் ஹன்சிகா மோத்வானி, தனது நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ள தகவலை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது 32 வயதான தமன்னாவுக்கு திருமணம் குறித்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com