மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் எப்போது? - வெளியான தகவல்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் எப்போது? - வெளியான தகவல்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் எப்போது? - வெளியான தகவல்
Published on

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம் எனப் பலரும் நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கான புரமோஷன் வேளைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு.

இந்த வாரம் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் தோன்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது. த்ரிஷா உட்பட மேலும் சிலரின் போஸ்டரும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டை தஞ்சை பெரிய கோவிலில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

தற்போது வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் டீசர் வெளியீட்டிற்கான நிகழ்வை நடத்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் மிக முக்கியமான சினிமா பிரபலங்கள் சிலர் தங்களின் ட்விட்டரில் இந்த டீசரை பகிரவும் இருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

-பா.ஜான்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com