\
மதம் மாறினாரா?: கமல் கேள்வியும், அக்‌ஷரா பதிலும்..!

மதம் மாறினாரா?: கமல் கேள்வியும், அக்‌ஷரா பதிலும்..!

மதம் மாறினாரா?: கமல் கேள்வியும், அக்‌ஷரா பதிலும்..!
Published on

கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் மதம் மாறியதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதை மறுத்துள்ளார்.

அக்ஷரா புத்தமதத்திற்கு மாறியதாக செய்திகள் பரவிய நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் அக்‌ஷூ...! மதம் மாறிவிட்டாயா? லவ் யூ.. அப்படி நீ மாறியிருந்தாலும். காதல் போன்று மதமும் நிர்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. மகிழ்ச்சியாக வாழ். - அன்புடன் உன் அப்பா” என்று ட்வீட் செய்திருந்தார். இந்த செய்தியால் அக்‌ஷரா மதம் மாறிவிட்டார் என்று செய்திகள் பரவின.

அதற்கு அக்‌ஷரா ஹாசன், “ஹாய் பாப்புஜி. இல்லை. நான் இன்னும் நாத்திகராகவே இருக்கிறேன். நான் புத்த மதத்தை அதை ஒரு வாழ்வியலாகவும், வாழ்க்கை நெறியாகவுமே ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரின் ட்வீட்களுக்கும் கமெண்ட் செய்துள்ள த்ரிஷா, “நீங்கள் இருவரும் ஆச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எப்போதும் எனது அன்பு உங்களுக்கு!” என்று ட்வீட் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com