\
ஆகஸ்ட் 18ல் வெளியாகிறதா விஐபி-2?

ஆகஸ்ட் 18ல் வெளியாகிறதா விஐபி-2?

ஆகஸ்ட் 18ல் வெளியாகிறதா விஐபி-2?
Published on

விஐபி-2 திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி தெலுங்கிலும், ஹிந்தியிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற விஐபி படத்தின் இரண்டாம் பாகமான விஐபி-2 உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியால் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மூன்று மொழிகளிலும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கிலும், ஹிந்தியிலும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கிலும், ஹிந்தியிலும் படத்திற்கு  ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் ரிசல்ட் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.  

தமிழில் ஆக்ஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் இன்று முதல் தொடங்கியுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com