வெளியானது மாஸ்டர் பட வீடியோ பாடல் - ட்ரெண்டிங்கில் #KuttiStoryVideoSong
‘மாஸ்டர்’ படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப் ட்ரெண்டில் முதல் இடம் பிடித்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஸ்டார் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் மக்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர் சென்று படம் பார்த்து வருகின்றனர். மாஸ்டர் படத்தினால் தங்களது துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக திரையரங்க உரியாமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வீடியோ பாடல் வெளியாகும் என பட தயாரிப்பு அறிவித்தது முதலே ட்விட்டரில் #KuttiStoryVideoSong ட்ரெண்டில் இடம்பிடித்தது. குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.