முத்தையா - விக்ரம் பிரபு கூட்டணி : வெளியானது ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக்

முத்தையா - விக்ரம் பிரபு கூட்டணி : வெளியானது ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக்

முத்தையா - விக்ரம் பிரபு கூட்டணி : வெளியானது ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக்
Published on

விக்ரம்பிரபு நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழில் ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’, ‘தேவாராட்டம்’ ஆகியப் படங்களை இயக்கியவர் இயக்குநர் முத்தையா. தற்போது இவரது தயாரிப்பில், விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘புலிக்குத்தி பாண்டி’.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘கொம்பன்’, ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

 ‘சுந்தரபாண்டியன்’ ‘ நீர்பறவை’ ‘மதயானைக் கூட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இசயமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com