அருண் விஜயின் 'யானை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அருண் விஜயின் 'யானை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அருண் விஜயின் 'யானை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

அருண்விஜய்யின் யானை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் யானை திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com