இவங்க வேற: பெயர் குழப்பத்தால் நடிகை அப்செட்!

இவங்க வேற: பெயர் குழப்பத்தால் நடிகை அப்செட்!
இவங்க வேற: பெயர் குழப்பத்தால் நடிகை அப்செட்!

கார் விபத்தில் பலியான நடிகை, தான் இல்லையென மற்றொரு நடிகையான ரேகா வி. குமார் கூறியுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த நடிகை ரேகா சிந்து (22). சென்னைஸ் அமிர்தா உட்பட சில விளம்பர படத்திலும் ருத்ரா என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட பின் பெங்களூருக்கு காரில் சென்றபோது, வேலூர் மாவட்டம் நாட்டறாம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் நடந்த விபத்தில் பலியானார்.

இறந்து போனது ரேகா சிந்து என்பது தெரியாமல், மற்றொரு கன்னட நடிகையான ரேகா வி.குமாரை தவறுதலாக சில மீடியா நினைத்துவிட்டது. சில இணையதளங்கள்இவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுவிட்டன. இவரது குடும்பத்தினருக்கு பலர் போன் செய்து விசாரித்துள்ளனர்.

இதையடுத்து முகப்புத்தகத்தில், ‘நண்பர்களே நான் நலம். தற்போது சிருங்கேரி கோவிலில் இருக்கிறேன். அது நான் இல்லை’ என்று கூறியுள்ளார் ரேகா வி.குமார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com