அமலா பாலை அடுத்து பஹத் பாசில்: கிரண்பேடி உத்தரவு!
போலி முகவரிச்சான்று அளித்து நடிகை அமலா பால், சொகுசு காரை வாங்கியதாக எழுந்துள்ள புகாரை விசாரிக்குமாறு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை அமலா பால், கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி பென்ஸ் சொகுசுக்காரை புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். சென்னையை சேர்ந்த விநியோகஸ்தாரிடம் ஒரு.கோடியே 12 லட்சம் ரூபாய் விலையில் வாங்கிய அந்த கார், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பதிவின் போது அமலா பால் குறிப்பிட்டுள்ள லாஸ்பேட்டையின் செயின்ட் ரீரசா தெரு என்ற முகவரி, பொறியியல் கல்லூரி மாணவருடையது என்று செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. போலி முகவரி கொடுத்து கார் வாங்கியதை அடுத்து, அந்தப் புகாரை விசாரிக்கும்படி, புதுச்சேரி போக்குவரத்து ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலி முகவரிச் சான்று அளித்து இதுபோன்று வருவாய் இழப்பு ஏற்படுத்துவது நாட்டுக்கே வருவாய் பாதிப்பு என்று கிரண்பேடி கூறியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை அமலா பாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மலையாள நடிகரும் நடிகை நஸ்ரியா கணவருமான பஹத் பாசிலும் இதே போன்று போலி முகவரில் கார் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.