சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ‘டான்’ படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

இன்று நடந்த இந்நிகழ்வின் போது, நடிகரும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு, ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா. சி ஆகியோர் உடன் இருந்தனர்.

பாடல்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கே.எம். பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணியை நாகூரான் கவனித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com