சின்மயி வழக்கு தொடரட்டும் சந்திக்க தயார் ! வைரமுத்து விளக்கம்
சின்மயி வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் மீ டூ (#MeToo) விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயின் புகார் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்மயி வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ள வைரமுத்து, “ சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை வைத்துள்ளேன். நான் நல்லவனா..? இல்லை கெட்டவனா..? என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.