\
கே.ஜி.எப். படத்தின் நியூ அப்டேட் - நடிகை ரவீனாவின் கேரக்டர் வெளியீடு..!

கே.ஜி.எப். படத்தின் நியூ அப்டேட் - நடிகை ரவீனாவின் கேரக்டர் வெளியீடு..!

கே.ஜி.எப். படத்தின் நியூ அப்டேட் - நடிகை ரவீனாவின் கேரக்டர் வெளியீடு..!
Published on

கே.ஜி.எப். படத்தில் பாலிவுட் நடிகை ரவீனா நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயரை அப்படத்தின் இயக்குநர் பிராஷாந்த் நீல் வெளியிடுள்ளார்.

கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் கே.ஜி.எப். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிராஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியிருந்த கே.ஜி.எப் படத்தின் பாகம் ஒன்றிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இராண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்பாகத்தில் நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரவீனா டாண்டன் பிறந்தநாளான இன்று அவர் கேஜிஎப் படத்தில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரான ராமிகாசென்னையும், கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் வெளியிட்ட இயக்குனர் பிராஷாந்த் நீல் “ மிருகத்தனத்திற்கு காவல்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அண்மையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் கதாபாத்திரத்தையும், புகைப்படத்தையும்  பிரஷாந்த் நீல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com