லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்ச்சசன் திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் ஆகியோர் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான திரைப்படம் ராட்ச்சசன். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடக்கத்தில் இந்தப் படம் மந்தமாகவே ஓடியது. 

பின்னர், படம் குறித்த நல்ல விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட நாட்கள் இந்தப் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது. தனிஒருவன் படத்திற்கு பிறகு மக்களின் ஆதரவால் நீண்ட நாட்கள் ஓடிய படம் ராட்ச்சசன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்ச்சசன் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்ச்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com