\
கே.ஜி.எஃப் கதைக்களம்.. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா?

கே.ஜி.எஃப் கதைக்களம்.. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா?

கே.ஜி.எஃப் கதைக்களம்.. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா?
Published on

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61- வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்களின் மற்ற படங்களின் பணிகளை முடித்துள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் 61- வது படத்தை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' படங்களை அடுத்து விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பா.ரஞ்சித்துடன் முதன் முறையாக இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com