\
’விஜய் 66’ படத்தில் நாயகியாக இணையும் ராஷ்மிகா மந்தனா?

’விஜய் 66’ படத்தில் நாயகியாக இணையும் ராஷ்மிகா மந்தனா?

’விஜய் 66’ படத்தில் நாயகியாக இணையும் ராஷ்மிகா மந்தனா?
Published on

‘விஜய் 66’ படத்தின் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், பான் இந்தியா படமாக உருவாகும் ‘விஜய் 66’ படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். இப்படத்தினை, முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர்கள், படக்குழுவினர் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அந்தத் தகவலை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் மறுத்திருந்தார். இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ‘விஜய் 66’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com