\
ஸ்ரீவள்ளியாக கவனம் ஈர்க்கும் ராஷ்மிகா மந்தனா: ’புஷ்பா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்ரீவள்ளியாக கவனம் ஈர்க்கும் ராஷ்மிகா மந்தனா: ’புஷ்பா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்ரீவள்ளியாக கவனம் ஈர்க்கும் ராஷ்மிகா மந்தனா: ’புஷ்பா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் ஹீரோயினாக நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவர் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏற்கெனவே, அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் போஸ்டர்கள் வெளியான நிலையில், இன்று நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. போஸ்டரில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஷ்மிகா பழங்குடியின பெண் கெட்டப்பில் கவனம் ஈர்க்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com