விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு! உயிர் பிழைத்ததாக பதிவிட்ட ராஷ்மிகா மந்தனா!

மும்பையிலிருந்து ஹைதராபாத் சென்ற போது விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துவிட்டதாக ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
rashmika mandanna
rashmika mandannaweb

அனிமல் பட வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அடுத்த பெரிய படமான புஷ்பா 2 ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகும் புஷ்பா ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை புஷ்பா 2 திரைப்படமும் பிளாக் பஸ்டர் ஆகும் நிலையில், இந்த வருடத்தில் இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகையாக ராஷ்மிகா மாறுவார்.

Animal
Animal

இந்நிலையில்தான், உற்சாகத்தில் இருந்துவரும் ராஷ்மிகா மந்தனா ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றபோது, அவர் பயணம் செய்த விமானம் தொழில்நுட்பக்கோளாறால் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அச்சம்பவத்தை ஒட்டி விமாத்திலிருந்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் ராஷ்மிகா “உயிர் பிழைத்துவிட்டோம்” என்ற டேக் லைனோடு பதிவிட்டுள்ளார்.

உயிர் பிழைத்துவிட்டோம் என பதிவிட்ட ராஷ்மிகா! என்ன நடந்தது?

டெக்கான் க்ரோனிக்கல் அறிக்கையின்படி, நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் மற்றும் பிற பயணிகளுடன் மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற ஏர் விஸ்தாரா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடுமையான அச்சத்தில் உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டது.

rashmika mandanna
rashmika mandanna

30 நிமிட போராட்டாங்களுக்கு பிறகு மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், மீண்டும் மும்பைக்குத் திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

rashmika
rashmika

இந்த நிலையில் தான் அந்த விமானத்தில் பயணம் செய்த ராஷ்மிகா மந்தனா, நடிகை ஷ்ரத்தா தாஸுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீயில் பகிர்ந்து “இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்” என்று பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com