Rashmika Mandanna
Rashmika Mandanna The Girlfriend

"அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்" - ராஷ்மிகா சொன்ன ஸ்வீட் பதில் | Rashmika Mandanna | The Girlfriend

நம்மிடம் பொய் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், எல்லாவற்றையும் நம் துணையுடன் இது சரியா, தவறா என வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
Published on

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ராகுல் ரவீந்திரா இயக்கியுள்ள தெலுங்குப் படம் `தி கேர்ள் ஃப்ரெண்ட்'. இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய ராஷ்மிகா "நிறைய படங்கள் நடித்து வந்தாலும் `தி கேர்ள் ஃப்ரெண்ட்' போன்ற ஒரு கதையை சொல்வது முக்கியமானது என தோன்றியது. வசூல், வெற்றி இதெல்லாம் எனக்கு தெரியாது; என் ரசிகர்கள், என்னுடைய படத்தை பார்க்க வரும் போது எதாவது ஒரு அனுபவத்துடன் செல்ல வேண்டும் என நினைப்பேன். இந்தப் படத்தில் நான் நடிக்க எடுத்த முடிவு சரியானது என நினைக்கிறேன்." எனக் கூறினார். மேலும் ராஷ்மிகாவிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

"இந்த பாய்ஃபிரெண்ட்  நமக்கு சரியானவரா என எப்படி தெரிந்து கொள்வது?"

"எனக்கும் அது தெரியாது. நம்மிடம் பொய் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், எல்லாவற்றையும் நம் துணையுடன் இது சரியா, தவறா என வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் வழி என நான் நினைக்கிறேன்."

"ராஷ்மிகாவின் TYPE யார்?"

"அது எல்லோருக்கும் தெரிந்ததுதான்."

"ராஷ்மிகாவுக்கு, நீங்கள் நடித்த பூமா பாத்திரத்தில் உங்களை காண முடிந்ததா?"

"நான் `தி கேர்ள் ஃப்ரெண்ட்' கதையை கேட்ட போது, நம் எல்லோரின் வாழ்க்கையிலும் வரும் சூழல் இது. காதல் கதை என்றாலே வழக்கமான விதத்தில் காட்டுவார்கள். `தி கேர்ள் ஃப்ரெண்ட்'ம் ஒரு காதல் கதைதான். ஆனால் இதுவரை யாரும் பார்க்காததாக இருக்கும். நமக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளும், சென்சிட்டிவான விஷயங்களை இதில் பார்க்கலாம். இது பல உரையாடல்களை துவக்கி வைக்கும்" என்று கூறினார்.

Rashmika Mandanna
ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்கப்போவது யார்? வெளிவரும் தகவல்கள் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com