\
"அழுகை வராவிட்டால் டிக்கெட் பணத்தை திரும்ப வாங்கிக்கோங்க"- நடிகர் ரன்வீர் சிங்

"அழுகை வராவிட்டால் டிக்கெட் பணத்தை திரும்ப வாங்கிக்கோங்க"- நடிகர் ரன்வீர் சிங்

"அழுகை வராவிட்டால் டிக்கெட் பணத்தை திரும்ப வாங்கிக்கோங்க"- நடிகர் ரன்வீர் சிங்
Published on

"ஜெய்ஷ்பாய் ஜோர்தார் படத்தை பார்த்துவிட்டு அழுகை வரவில்லை என்றால், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்” என அப்படத்தின் நாயகன் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரன்வீர் சிங் `ஃபெமினா ப்யூட்டிஃபுல் இந்தியன்ஸ் 2022’ நிகழ்ச்சியில் நேற்று இரவு பங்கேற்றிருந்தார். அப்போது மீடியாவிடம் பேசிய அவர், தனது ஜெய்ஷ்பாய் ஜோர்தார் திரைப்படம் குறித்து பேசினார். இந்தத் திரைப்படம் திவ்யாங் தக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. அந்தத் திரைப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ஷாலினி பாண்டே, தீக்‌ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படம், சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண்ணின் சம உரிமைகள் குறித்து பேசும் படமாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தைப் பற்றி பேசிய ரன்வீர் சிங், “திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் அழுகை வரும். ஒருவேளை வரவில்லை என்றால், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com