சினிமாவாகிறது 1983 உலகக் கோப்பை வெற்றி: கபில்தேவ் ஆகிறார் ரன்வீர் கபூர்
இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டில் உலகக்கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு திரைப்படம் உருவாகிறது. ’83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கபில்தேவ்-ஆக, ரன்வீர் சிங் நடிக்கிறார். கபீர் கான் இயக்குகிறார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 -ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியில் எப்படி போராடி கோப்பையை கைப்பற்றியது என்பதை உணர்வுபூர்வமாக சொல்ல இருக்கிறது இந்தப் படம். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் படங்கள் நல்ல வசூலைப் பெற்றுள்ளதால் கிரிக்கெட் தொடர்பான படங்களை எடுக்க இந்தி சினிமாவில் போட்டி நிலவுகிறது.