\
திருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி

திருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி

திருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி
Published on

பிரபல பாலிவுட் திரை நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர். 

பாலிவுட்டின் டாப் ஹீரோயின் தீபிகா படுகோன். இவரும் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். விழாக்களுக்கு ஒன்றாக வரும் இவர்களின் நெருக்கம், ‘பத்மாவத்’ படத்துக்குப் பிறகு அதிகமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

தீபிகாவும், ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திருமண தேதியை அவர்கள் உறுதி செய்யாமலே இருந்தனர்.

இந்நிலையில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருமண தேதி தொடர்பாக ஒரு அழைப்பிதழை பதிவிட்டுள்ளனர். அதில், வருகின்ற நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகள் திருமண விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங், தீபிகா ஜோடி பாஜிராவ் மஸ்தானி, ஃபைண்டிங் பன்னி, பத்மாவட் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com