\
”என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்: நெருக்கமானவன்”: நடிகர் பசுபதி

”என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்: நெருக்கமானவன்”: நடிகர் பசுபதி

”என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்: நெருக்கமானவன்”: நடிகர் பசுபதி
Published on

"என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன்" என்று நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார், நடிகர் பசுபதி.

சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில், ரங்கன் வாத்தியாராக எதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்த்து ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறார் நடிகர் பசுபதி. இந்த நிலையில், நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பசுபதி. அவரது அறிக்கையில், ”பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் மற்றும் கே9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம், அவர் பெயரில் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டதை அறிந்து “ நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை” என்பதையும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com