”கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து கல்யாணம்” - ராணா தந்தை தகவல்

”கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து கல்யாணம்” - ராணா தந்தை தகவல்

”கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து கல்யாணம்” - ராணா தந்தை தகவல்
Published on

ராணா - மிஹீகா திருமணம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற பல்லாலதேவா வேடத்தின் மூலம் மிரட்டியவர் நடிகர் ராணா டகுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இம்மாதம் இத்திரைப்படம் வெளியிடப்பட இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராணா டகுபதி அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த பதிவில், ‘அவள் காதலுக்குச் சம்மதம்’ கூறியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் காதலியின் பெயரை மிஹீகா பஜாஜ் என்று கூறி ஹேஷ்டேக் ஆகப் பயன்படுத்தினார். இதனை அடுத்து ராணாவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராணா - மிஹீகா திருமணம் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து டெகான் கிரானிக்கல் நாளிதழுக்குப் பேசிய அவர், இரு வீட்டார்கள் கலந்துகொள்ளும் திருமணமாக அது இருக்கும் என்றும், கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றியே திருமணம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com