\
விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது இவர்கள்தான்!

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது இவர்கள்தான்!

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது இவர்கள்தான்!
Published on

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் தாதா கதையை மையப்படுத்தி  எடுக்கப்பட்ட விக்ரம் வேதா படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் அசத்தி வருகிறது. மாதவன், விஜய்சேதுபதியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்தப்படத்தில் ராணா டகுபதி, வெங்கடேஷ் நடிக்க இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் தெலுங்கு படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தாதாவையும், காவல்துறை அதிகாரியையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட விக்ரம் வேதா தமிழில் இதுவரை 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலையும் கடந்து வசூலைக் குவித்து வருவதால் இப்படத்தை வேறு சில மொழிகளிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com