\
“கொரோனாவுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்”- ரம்யா பாண்டியன்...!

“கொரோனாவுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்”- ரம்யா பாண்டியன்...!

“கொரோனாவுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்”- ரம்யா பாண்டியன்...!
Published on

“கொரோனாவுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்”- ரம்யா பாண்டியன்...!

தற்போதைய உலக சூழலில் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த பாதுகாப்பாக இருக்க முடியும். இதுகுறித்து எத்தனையோ வழிகளில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட சிலர் சாலைகளில் அவசியமின்றி அலைவதை தவிர்ப்பதாக இல்லை.

திரைத்துறை பிரபலங்களும் கூட,சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். ஜோக்கர் திரைப்பட நாயகி ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவை எதிர்த்து நாம் fight பண்ணியே ஆகவேண்டும்,.” என பேசியுள்ளார்.

மேலும் “எங்க வீட்டிலும் கூட வேலை ஆட்கள் யாரும் வரவில்லை, இந்த தருணத்தில் என் அம்மாவிற்கு சமையலில் நான் உதவுகிறேன்.” என கூறியிருக்கும் ரம்யா பாண்டியன் “இத்தனைக்கு பிறகும் பலர் வெளியில் செல்வதை பார்க்க முடிகிறது, அது மனதிற்கு கஷ்டமாக உள்ளது., நம்முடைய நல்ல எதிர்காலத்திற்காகவும், தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் நாம் இதை செய்யனும். lets fight against corona.” என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது ரம்யா பாண்டியனின் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com