சூர்யா தயாரிப்பில் நடிக்கும் ரம்யா பாண்டியன்!

சூர்யா தயாரிப்பில் நடிக்கும் ரம்யா பாண்டியன்!

சூர்யா தயாரிப்பில் நடிக்கும் ரம்யா பாண்டியன்!
Published on

’பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதற்கான, அதிகாரபூர்வமான அறிவிப்பை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் அறிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தார் ரம்யா பாண்டியன். அதனைத்தொடர்ந்து, தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார்.

சினிமாவில் தனக்கென சரியான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர், விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, கடைசியாக பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் இவரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிக்பாஸிலிருந்து வெளியில் வந்தவுடனேயே, சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி. இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனமும் ரம்யா பாண்டியனும் இன்று உறுதி செய்திருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com