பாகுபலி படத்துக்கு பிறகு வரலாற்றுப் படம் ஒன்றில் மீண்டும் ’சிவகாமி’யாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
’பாகுபலி’ படத்தில் ’சிவகாமிதேவி’ யாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்தப் படத்தின் ராஜமாதாவாக வாழ்ந்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தது. இரண்டு பாகத்திலும் சிறப்பாக நடித்திருந்த ரம்யா, இப்போது மீண்டும் சிவகாமியாக மாறுகிறார்.
’சிவகாமி’ என்ற வரலாற்றுப் படம் கன்னடத்தில் உருவாகிறது. 9ஆம் நூற்றாண்டு ராணியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில், சிவகாமியாக, ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மது இயக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகர்கள் பிரவீன் பாயல் ராதாகிருஷ்ணா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.