\
நடிகை ரேவதி இடத்தை பிடிக்கப்போவது யார்?

நடிகை ரேவதி இடத்தை பிடிக்கப்போவது யார்?

நடிகை ரேவதி இடத்தை பிடிக்கப்போவது யார்?
Published on

ரேவதி இடத்தை யார் பிடிக்கப் போகிறார்கள் என்பதில் குஷ்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே போட்டி நிலவுகிறது. 

தனுஷ் இயக்கிய முதல் திரைப்படம் ‘ப.பாண்டி’. இது கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் ராஜ்கிரண் நாயகனாக நடித்திருந்தார். முதலில் இப்படத்திற்கு ‘பவர் பாண்டி’ என தலைப்பிட்டிருந்தனர். ஆனால் வரி விலக்கு சிக்கல்கள் எழும் என்பதால் அதன் தலைப்பை இறுதிக் கட்டத்தில் படக்குழு ‘ப.பாண்டி’ என மாற்றியது. வயதான ஒருவரின் காதல் அனுபவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தனுஷை ஒரு தரமான இயக்குநராக அடையாளப்படுத்தி இருந்தது. 2017 ஆண்டு வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய பட்டியலில் இது இடம் பிடித்தது. 

இந்நிலையில் இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷூம் தனுஷ் வேடத்தில் சுதீப்பும் நடிக்க உள்ளனர். ரேவதி வேடத்தில் மூத்த நடிகை ஒருவரை படக்குழு தேடி வருவதாக செய்தி அடிப்பட்டது.

இந்நிலையில் ரேவதியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க குஷ்புவிடமும் ரம்யா கிருஷ்ணனிடமும் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு நடிகைகளில் இறுதியில் யார் ரேவதியின் இடத்தை பிடிக்கப் போகிறார் என ரசிகர்கள் இடையே எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com