அடுத்ததும் ஹீரோதான்: சந்தானம் தில்

அடுத்ததும் ஹீரோதான்: சந்தானம் தில்

அடுத்ததும் ஹீரோதான்: சந்தானம் தில்
Published on

நடிகர் சந்தானம் அடுத்தும் ஹீரோவாகவே நடிக்க தயாராகி வருகிறார்.

தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். இவரது ரைமிங் வசனம் மற்றும் டைமிங் பஞ்ச் போன்றவை இளம் சினிமா ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சி நடிகராக இருந்த சந்தானத்திற்கு வெள்ளித்திரை அள்ளிக் கொடுத்தது அதிகம். ஆனால் சில ஆண்டுகளாகவே அவர் காமெடி ரோலில் நடிப்பத்தை தவிர்த்துவிட்டார். அவரது கவனம் ஹீரோ பக்கம் தாவியது. அதற்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஒரு காரணம் என கூறப்பட்டது. அவரும் சில படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் அதிகம் வெற்றி பெறவில்லை. 2016 ஆண்டு அவர் நடிப்பில் வெளியான “ தில்லுக்கு துட்டு”  படம் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. ராம்பாலா இதை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. மீண்டும் ராம்பாலாவே இதனை இயக்குகிறார். சந்தானம் தாடியுடன் புதிய கெட் அப்பில் இதன் பூஜையில் இன்று கலந்து கொண்டார். இப்படத்தில் தீப்தி ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளார். தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்க உள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 15 நாட்கள் ஹைதராபத்தில் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com