\
திருப்பதியில் கணவருடன் ரம்பா

திருப்பதியில் கணவருடன் ரம்பா

திருப்பதியில் கணவருடன் ரம்பா
Published on: 

நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகை ரம்பா, கனடாவில் வசித்துவரும் தொழிலதிபர் இந்தர்குமாரை கடந்த 2010-ம் வருடம் திருமணம் செய்தார். அவர்களுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த ரம்பா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நடந்துவந்த நிலையில் கணவருடன் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து வாழ்வதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com