\
லிங்குசாமியின் ‘தி வாரியர்’: படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

லிங்குசாமியின் ‘தி வாரியர்’: படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

லிங்குசாமியின் ‘தி வாரியர்’: படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்
Published on

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி.  கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14-ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘புல்லட்’ முதல் பாடம் வெளியாகி இன்ஸ்டா ரீல்ஸில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

ராம் பொத்தினேனி போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. சமீபத்தில் வெளியான டீசரில் அவரின் போலீஸ் கெட்டப் ஆக்‌ஷன் காட்சிகளும் பிருந்தா சாரதியின் வசனங்களும் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொடுத்திருக்கின்றன. உடல் மொழியாலேயே மிரட்டியிருந்தார் நடிகர் ஆதி. இந்த நிலையில்’தி வாரியர்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை உற்சாகமுடன் படக்குழு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com