சினிமா
தெலுங்கின் முன்னணி நடிகருடன் இணையும் இயக்குநர் லிங்குசாமி! – அதிகாரபூர்வ அறிவிப்பு!
தெலுங்கின் முன்னணி நடிகருடன் இணையும் இயக்குநர் லிங்குசாமி! – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கின் முன்னணி ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ’அஞ்சான்’, ’சண்டக்கோழி 2’ படங்கள் வெற்றி பெறவில்லை. மாறாக, விமர்சனத்தை குவித்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார்.
இவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது தமிழ் நடிகர் அல்ல. தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் பூஜையின் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகவுள்ளது.