”ஊர்மிளாவின் அழகுக்காகவே படம் எடுத்தேன்” - ‘ரங்கீலா' ரகசியம் பகிர்ந்த ராம் கோபால் வர்மா!
ஊர்மிளாவுக்காகவே ரங்கீலா படத்தை எடுத்ததாக இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
1996இல் வெளியான ‘ரங்கீலா’ படத்தில் ஊர்மிளா நாயகியாக நடித்தார். முன்னதாக ராம் கோபால் வர்மாவின் தெலுங்குப் படமான ‘துரோகி’யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அதில் வெளிப்பட்ட ஊர்மிளாவின் அழகினால் ஈர்க்கப்பட்டதால்தான் ’ரங்கீலா’ படத்தை எடுத்ததாக ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். ஊர்மிளாவின் அழகை காண்பிக்கும் விருப்பமே ’ரங்கீலா’ படத்துக்கான விதை என்று அவர் கூறியுள்ளார். ‘ரங்கீலா‘ வெளியாகும்போது வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
தென்னிந்தியர்களான வர்மா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இருவருக்கும் முதல் நேரடி இந்திப் படம் ‘ரங்கீலா’. அப்போது அமீரும் ஊர்மிளாவும் நடித்த பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்திருந்ததாகவும் வர்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால் வெளியானபின் ‘ரங்கீலா’ படமும் ரஹ்மானின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு கல்ட் அந்தஸ்தையும் பெற்றுவிட்டன. 1960இல் வெளியான ஹாலிவுட் இசைப் படமான ‘The Sound Of Music’ படத்தைப் போல் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்த்திலேயே ‘ரங்கீலா’ படத்தை எடுத்ததாகவும் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.