கிரேனில் பிரம்மாண்ட பெயர்.. வான வேடிக்கை.. கேக் - ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டம்

கிரேனில் பிரம்மாண்ட பெயர்.. வான வேடிக்கை.. கேக் - ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டம்
கிரேனில் பிரம்மாண்ட பெயர்.. வான வேடிக்கை.. கேக் -  ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரபல நடிகர் ராம்சரணின் 36 ஆவது பிறந்த நாளை, ஆர்.ஆர்.ஆர் படக்குழு வானவேடிக்கைகளை நிகழ்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயர்களுள் ஒருவரான நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தனது 36 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்தநிலையில் இயக்குநர் ராஜமெளலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ராம்சரணின் பிறந்தநாள் பிரம்மாண்ட முறையில் கொண்டாடப்பட்டுள்ளது. அது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “கிரேனில் ராம்சரணின் பெயர் பிராம்மாண்ட முறையில் கொண்டுவரப்பட்டு, வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதனைப்பார்த்த ராம்சரண் ஆச்சரியத்தில் திளைத்து நின்றார். அதனைத்தொடர்ந்து கொண்டுவரப்பட்ட கேக்கை ராம்சரண் வெட்டி இயக்குநர் ராஜமெளலி உட்பட அனைவருக்கும் கொடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நியூயார்க் நகரில் உள்ள ஒரு டவரிலும் அவரது புகைப்படம் ஒளிபரப்பப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

சிரஞ்சீவியுடன் ராம்சரண் இணைந்து நடித்திருக்கும் ஆச்சார்யா திரைப்படம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சிரஞ்சீவி அப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

ராம்சரணும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com