\
ராம் - நிவின் பாலி இணையும் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்

ராம் - நிவின் பாலி இணையும் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்

ராம் - நிவின் பாலி இணையும் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்
Published on

இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பேரன்பு’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்துக்குப்பின் நடிப்பில் கவனம் செலுத்திய ராம், மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் இயக்கத்துக்கு திரும்பிய ராம் நிவின் பாலி - அஞ்சலி இணையும் புதிய படத்தினை இயக்கி வருகிறார் . இப்படத்தை சிம்புவின் ’மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியது. சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிவின் பாலி, சூரி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மொத்தப் படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது. இதனை சுரேஷ் காமாட்சி, நிவின் பாலி, ராம் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com