\
உடற்பயிற்சி எல்லோருக்கும் முக்கியம்: ரகுல் பிரீத் சிங்

உடற்பயிற்சி எல்லோருக்கும் முக்கியம்: ரகுல் பிரீத் சிங்

உடற்பயிற்சி எல்லோருக்கும் முக்கியம்: ரகுல் பிரீத் சிங்
Published on: 

உடற்பயிற்சி எல்லோருக்கும் முக்கியம் என்பதால் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வருவதாக நடிகை ரகுல் பிரீத் சிங் கூறினார்.

தமிழில், ’தடையறத் தாக்க’, ’புத்தகம்’, ’என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’ஸ்பைடர்’ படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். கார்த்தியுடன், ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த இவர், தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ஐதராபாத்தில் ரூ.3 கோடியில் சொந்த வீடு வாங்கி, அங்கு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

நடிப்பைத் தவிர பிசினசிலும் ஈடுபட்டுள்ள ரகுல் பிரீத் சிங், அங்கு இரண்டு இடங்களில் எஃப் 5 என்ற பெயரில் ஃபிட்னஸ் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மூன்றாவது ஃபிட்னஸ் ஸ்டூடியோவை, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் திறந்து வைத்தார். 

இதுபற்றி ரகுல் பிரீத் சிங் கூறும்போது, ‘உடற்பயிற்சி எல்லோருக்கும் முக்கியமானது. அதனால்தான் உடற்பயிற்சிக் கூடங்களை ஐதராபாத்தில் பல பகுதிகளில் திறந்து வருகிறேன். தெலுங்கில் 15 படங்களில் நடித்துள்ளேன். இந்தியிலும் நடித்துவருகிறேன். தமிழில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com