\
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு
Published on

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால் நான்  தனிமைப்படுத்திக்கொண்டேன். விரைவில்  குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com