தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்து அதில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் தெலுங்கு பக்கம் திரும்பினார்.
குறிப்பாக சமந்தா தமிழுக்கு வந்த நேரம் பார்த்து அவரது அபிமான ஹீரோக்களை கேட்ச் செய்து முன்னணி இடத்தை கைப்பற்றி விட்டார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் இவர், அடுத்து கார்த்தியுடன் ஒரு படத்திலும், அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங்கின் இந்த அதிரடி வளர்ச்சியை கண்டு தமிழில் வளர்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட சில நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.