\
சொகுசு கார் வாங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

சொகுசு கார் வாங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

சொகுசு கார் வாங்கிய ரகுல் ப்ரீத் சிங்!
Published on

தமிழில் ’தடையறத் தாக்க’, ’என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் கவனம் செலுத்தினார். இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ’ஸ்பைடர்’ படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மகேஷ்பாபு ஹீரோ. இந்தப் படம் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. இதையடுத்து தமிழில், கார்த்தியுடன் ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இந்தியில் ‘அய்யாரி’ என்ற படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் தனக்குத் தானே ஒரு கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார் ரகுல். அந்த கிஃப்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார். 
தற்போது டெல்லியில், நீரஜ் பாண்டே இயக்கும் ’அய்யாரி’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் ரகுல். இதன் ஷூட்டிங் முடியும் நாளில் கார் அவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com