’தனுஸ்ரீ அப்போது போதையில் இருந்தார்’: பிரபல நடிகை பகீர் தகவல்
நானா படேகர் போன்ற சிறந்த நடிகரை பப்ளிசிட்டிக்காக நடிகை தனுஸ்ரீ தத்தா அவமானப் படுத்துகிறார் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
’காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பிரபல பாலிவுட் நடிகரான இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச் சாட்டை கூறியிருந்தார். இவர், தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர்.
‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதர வாக செயல்பட்டனர்.இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தினரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம்.
ரஜினிகாந்த், அக்ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் அவருடன் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால், எனக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இதுபோன்ற வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர்’ என கூறி இருந்தார்.
இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்தவர்.
‘கணேஷ் பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத்துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார் தனுஸ்ரீ. இந்நிலையில் இந்தப் புகாரை மறுத்துள்ள நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்கு னர் விவேக் அக்னிகோத்ரி மீதும் பரபரப்பு புகார் சொல்லி இருந்தார் தனுஸ்ரீ.
இதையடுத்து தனுஸ்ரீக்கு ஆதரவாக பிரபலமான இந்தி நடிகைகள், பர்ஹான் அக்தர், டிவிங்கிள் கண்ணா, பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், பரினீதி சோப்ரா, ஸ்வாரா பாஸ்கர், ரிச்சா சதா உள்ளிட்ட சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
(ராக்கி சாவந்த்)
இந்நிலையில் நானா படேகருக்கு ஆதரவாக, நடிகை ராக்கி சாவந்த் பேட்டியளித்துள்ளார். ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ படத்தில் தனுஸ்ரீ-க்கு பதில் இவர்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தனுஸ்ரீயின் புகார் பற்றி ராக்கி கூறும்போது, ‘அன்றைய தினம் கணேஷ் ஆச்சார்யா என்னை செட்டுக்கு அழைத்தார். சென்றேன். அங்கு என்ன நடந்தது என்று தெரியாது. என்னை ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று சொன்னார். நானா படேகரும் கேட்டுக்கொண்டதால் சம்மதித்தேன். அப்போது வெளியே நின்றிருந்த கேரவனில் மீடியா கூட்டம் நின்றிருந்தது. விசாரித்தேன். மூன்று, நான்கு மணி நேரமாக தனுஸ்ரீ சுயநினைவில்லாமல் இருப்பதாகச் சொன்னார்கள். அவர் ஓவர் போதை காரணமாக மயக்கத்தில் இருந்தார். பின்னர், ’அதை பற்றி கவலைப்படாதே... நீ நடித்துக்கொடு’ என்று நானாவும் கணேஷ் ஆச்சார்யாவும் சொன்னார்கள். நான் நடித் துக்கொடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.