\
நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்!

நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்!

நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்!
Published on

‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ராக்கி சாவந்த் புகார் தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல் வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் பலர் அவரது செல்போனுக்கு ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளனர்.

இதற்கு கர்னி சேனா என்ற அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ள ராக்கி சாவந்த், பாலிவுட் படங்களை குறி வைத்து இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல என்றும், காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் ராக்கி கூறியுள்ளார். இந்த மிரட்டல் குறித்து அவர் கோரேகாவ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com