ரஜினிகாந்த் மருமகன் பாஸ்போர்ட், பணம் லண்டனில் திருட்டு

ரஜினிகாந்த் மருமகன் பாஸ்போர்ட், பணம் லண்டனில் திருட்டு

ரஜினிகாந்த் மருமகன் பாஸ்போர்ட், பணம் லண்டனில் திருட்டு
Published on

ரஜினிகாந்தின் மருமகனும் சவுந்தர்யா ரஜினிகாந்தின் கணவருமான விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்டது.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபரும் நடிகருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். விசாகன் வெளிநாட்டிலும் பிசினஸ் செய்துவருகிறார். இதற்காக அவர் அடிக்கடி வெளிநாடு சென்றுவருவார்.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினியும் விசாகனும் ஒன்றாக லண்டன் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்க ளுக்கு முன் எமிரேட்ஸ் விமானம் மூலம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்குச் சென்றனர். அங்கு விசாகன் தனது பாஸ் போர்ட் மற்றும் அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த பேக்-கை பார்த்தார். அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் அவர்கள் அங்குள்ள ஓட்டலில் ஒன்றில் தங்கினர். இதுபற்றி இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரஜினிகாந்தின் மகள், மருமகன் என்பது தெரிந்ததும் உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கினர்.

இந்நிலையில் அவரது பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க டாலரை திருடியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com