\
மனம் புண்படாமல் விமர்சியுங்கள்: ரஜினி வேண்டுகோள்

மனம் புண்படாமல் விமர்சியுங்கள்: ரஜினி வேண்டுகோள்

மனம் புண்படாமல் விமர்சியுங்கள்: ரஜினி வேண்டுகோள்
Published on

திரைப்படங்களை விமர்சிப்பவர்கள் அது தொடர்புடையவர்களின் மனம் புண்படாதபடி விமர்சிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் நெருப்புடா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, விவேக், இயக்குனர் வாசு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் என திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகர்‌ சிவாஜி ‌கணேசன் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். திரைப்படம் வெளியான உடன் சமூக வலைதளங்களில் அது‌பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் முன் வைப்பது குறித்து விஷால் கூறிய கருத்தை ஆதரிப்பதாக கூறிய ரஜினிகாந்த், விமர்சனங்கள் முன் வைக்கப்பட வேண்டும் ஆனால் அது மனதை புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com