\
20வது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா – ராஜ்கிரண்!

20வது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா – ராஜ்கிரண்!

20வது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் சூர்யா – ராஜ்கிரண்!
Published on

பாண்டிராஜ் இயக்கவிருக்கும் ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யாவின் ‘சூர்யா40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். தற்போது, படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே, சூர்யா – ராஜ்கிரண் கூட்டணி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படத்தில் இணைந்திருந்தனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com