தமிழருவி மணியனுக்கும், அர்ஜூன மூர்த்திக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார்.
மேலும் தமிழருவி மணியனுக்கும், அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ''3 ஆண்டுகளாக எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்கள், அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியின் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களால் என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்'' என தெரிவித்துள்ளார்.