\
'தர்பார்' படத்தின் ஓப்பனிங் பாடல் இன்று மாலை வெளியீடு

'தர்பார்' படத்தின் ஓப்பனிங் பாடல் இன்று மாலை வெளியீடு

'தர்பார்' படத்தின் ஓப்பனிங் பாடல் இன்று மாலை வெளியீடு
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

அதற்கு முன்பாக இன்று மாலை படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிங்கில் ட்ரேக் முறையில் வெளியிடுகின்றனர். அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நெருப்பு பேரோட' என தொடங்கும் தர்பார் பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com