\
உலகம் முழுவதும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ரூ.225 கோடி வசூல் எனத் தகவல்

உலகம் முழுவதும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ரூ.225 கோடி வசூல் எனத் தகவல்

உலகம் முழுவதும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ரூ.225 கோடி வசூல் எனத் தகவல்
Published on

ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தை தனியார் நிறுவனம் தயாரித்தது. தீபாவளி அன்று வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 225 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  படம் நேற்று ஒருநாள் மட்டும் ரூபாய் 7.14 கோடிரூபாயை வசூலித்துள்ளது.

இது தொடர்பாக சினிமா வர்த்தக ஆய்வாளர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில், 'முதல்வாரம் - 202.47 கோடி. இரண்டாவது வாரம்: முதல்நாள் - 4.05 கோடி, இரண்டாவது நாள் - 4.90 கோடி, மூன்றாவது நாள் - 6.21 கோடி, நான்காவது நாள் - 7.14 கோடி, மொத்தம் இதுவரை - 224.77 கோடி ரூபாய் வசூலித்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com