\
சீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்!

சீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்!

சீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்!
Published on

ரஜினிகாந்தின் ’2.0’ படம் சீனாவில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் உட்பட பலர் நடித்த படம், ‘2.ஓ’. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன இந்த படம் உலகம் முழுவதும் 10,500 ஸ்கிரீன்களில் வெளியாகி சாதனை படைத்தது. வேறு எந்த இந்திய படமும் இத்தனை ஸ்கிரீன்களில் வெளியானதில்லை. ’பாகுபலி 2’ 9000 ஸ்கிரீன்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்தப் படம் சீனா உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதற் கான மொழி மாற்றப்பணிகள் நடந்துவந்தன. இந்நிலையில்  சீன மொழியில் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் போஸ்டரை நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com